ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-26 12:18 GMT

மத்திய-மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணை தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள 77 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்