ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டையில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அடுத் தமாதம் நடக்கிறது.

Update: 2023-04-09 16:56 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில், அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை ஓய்வூதிய இயக்குனர், ராணிப்பேட்டை மாவட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம், பணிக் கொடை மற்றும் இதர ஓய்வூதிய பயன்கள் முதலியவற்றிற்கான உத்தரவுகள் இதுநாள் வரை வழங்கபடாமல் நிலுவையில் இருந்தால், இது குறித்து தங்களது கோரிக்கைகளை அவை எந்த அலுவலகத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும், ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்தின் பெயர் மற்றும் ஓய்வு பெற்ற நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு இரட்டை பிரதியில் 'ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்ட விண்ணப்பம்' எனக் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டருக்கு வருகிற 5.5.23-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனைத்து மனுக்களும் உரிய அலுவலருக்கு தக்க நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரால் நேரடியாக உரிய ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் பயன் பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்