போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-06-25 19:00 GMT

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியான வ.உ.சி. சாலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டிவந்த இளம் சிறார்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்