அதிவேகமாக சென்ற தனியார் பஸ்களுக்கு அபராதம்

விழுப்புரம் அருகே அதிவேகமாக சென்ற 5 தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்

Update: 2023-04-19 18:45 GMT

விழுப்புரம்

பொதுமக்கள் புகார்

விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் தனியார் பஸ்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்வதாகவும், இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்று உயிர்பலி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோலியனூர் கூட்டுசாலை பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

5 பஸ்களுக்கு அபராதம்

அப்போது விழுப்புரத்தில் இருந்து அதிவேகமாக புதுச்சேரி நோக்கிச்சென்ற 5 தனியார் பஸ்களை நிறுத்தி அதன் டிரைவர், கண்டக்டர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அதிவேகமாக இயக்குவது கண்டறிந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், எங்களது நடவடிக்கை இனி கடுமையாக இருக்கும்.

ஆகவே தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சீரான வேகத்தில் செல்ல வேண்டும். அதையும் மீறி அதிவேகமாக சென்றால் சம்பந்தப்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்