கால்வாயில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்

பாளையங்கால்வாயில் குப்பை கொட்டியவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2023-08-30 19:38 GMT

மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி பாளையங்கால்வாய் பகுதிகளில் சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது. மேலும் மேலப்பாளையம் பகுதிகளில் பாளையங்கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டிய நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்