அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களுக்கு அபராதம்

புளியரையில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2023-06-09 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே தமிழக எல்லைப்பகுதியான புளியரை சோதனை சாவடி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதையொட்டி கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புளியரை சோதனை சாவடியில் புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றி வந்த 3 கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 கனரக வாகனங்களுக்கு ரூ.98 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்