தேன்கனிக்கோட்டை பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

Update: 2023-09-22 19:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் புகையிலை ஒழிப்பு, அயோடின் பற்றாக்குறை, டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஸ்ரீதர், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவகுருநாதன், கார்த்திக், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், இளங்கோ, நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் நடேசன் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொது இடங்களில் விதிமுறையை மீறி புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை பற்றிய விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு புகையிலையால் வரும் தீமைகள் பற்றி விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டெங்கு கொசுப்புழு பரவும் இடங்களை ஆய்வு செய்து பேரூராட்சி வாகனம் மூலம் டயர்கள் நீக்கம், கொசுப்புழு பரவும் தன்மை கொண்ட இடங்களை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கடைகள் மற்றும் வீடுகளில் அயோடின் உப்பு தான் உபயோகப்படுத்தபடுகிறதா? என பரிசோதிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சி வளாகத்தில் கொசுப்புழு பணியாளர்களுக்கு கொசுப்புழு கட்டுப்படுத்தும் முறை பற்றியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் பணியாளர்களுக்கு குளோரினேசன் செய்யும் முறை பற்றியும் பயிற்சி அளித்தனர். மேலும் புகையிலை,, அயோடின் பற்றாக்குறை, டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்