முககவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம்; நெல்லை போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை

நெல்லையில் முககவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனா் சீனிவாசன் எச்சரிக்ைக விடுத்துள்ளாா்.;

Update:2022-06-28 01:44 IST

நெல்லையில் முககவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனா் சீனிவாசன் எச்சரிக்ைக விடுத்துள்ளாா்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு நேற்று முதல் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. முக கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு) கலந்துகொண்டு முக கவசங்களை பொது மக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அபராதம்

அப்போது துணை கமிஷனர் சீனிவாசன் கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்துதான் வர வேண்டும். இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து முக கவசம் அணியாத படி வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கருத்த பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்