உளுந்தூர்பேட்டை அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update:2022-06-17 22:09 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே வடபூவனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை மண்டல பூஜை மற்றும் சிறப்பு பரிவார தெய்வங்களுக்கான யாகம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்