'மாணவர்களின் பாதுகாப்புக்கு உடற்கல்வி ஆசிரியர்களே பொறுப்பு' - திருப்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர்,
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளி செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் சுற்றறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்தில் கட்டட பணிகள் நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு என்றும், மாணவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு உடற்கல்வி ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.