பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி வாசுதேவநல்லூரில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-08-17 16:54 GMT

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் ஊராட்சி சார்பில் மாமன்னர் பூலித்தேவனின் நினைவு மாளிகையில் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நினைவு மாளிகை வளாகத்தில் புதிதாக கொடி கம்பம் அமைத்து சுதந்திர விழா நடந்தது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து பூலித்தேவன் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் யூனியன் துணை தலைவர் சந்திரமோகன், நெல்கட்டும் செவல் பஞ்சாயத்து தலைவர் பாண்டியராஜா, வாசுதேவநல்லூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன், யூனியன் உதவி திட்ட அலுவலர் முத்து இளங்கோ, ஊராட்சி செயலர் சக்தி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்