பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
வாசுதேவநல்லூரில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு வாசுதேவநல்லூர் யூனியன் நெல்கட்டும்செவல் ஊராட்சியில், இந்திய சுதந்திரத்துக்கு முதல் முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவன், அதன் அருகில் பச்சேரி கிராமத்தில் உள்ள வெண்ணி காலாடி மற்றும் ஒண்டிவீரன் ஆகியோரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், ஒன்றிய செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக அவர் வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன், நெல்கட்டும் செவல் பஞ்சாயத்து தலைவர் பாண்டியராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.