பேட்டை:
மானூர் யூனியனுக்கு உட்பட்ட மதவக்குறிச்சி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை வெங்கலபொட்டல் கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய சாலை திறப்பு விழா நடந்தது. மானூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் வின்சென்ட் அரிச்சந்திரன், மகளிர் அணி மேகலா, ஒன்றிய கவுன்சிலர் பாசக்குமாரி உள்பட பலா் கலந்து கொண்டனர்.