பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலைய இடம் ஆய்வு

பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையத்திற்கான ஆரம்ப கட்ட பணி தொடங்கியதுடன் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-06-03 20:43 GMT

திருச்சிற்றம்பலம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் உள்ள பஸ் நிலையம் கடந்த 1986-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததுடன், கட்டிட உறுதித்தன்மையும் மோசமாக இருக்கிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அடிப்படை வசதிகள் இன்றி பஸ்நிலையம் காணப்படுவது குறித்து சமீபத்தில் `தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது.

ஆய்வு


இதன் எதிரொலியாக புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அண்ணாதுரை எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.






Tags:    

மேலும் செய்திகள்