ரபேல் வாட்ச் அணிந்து மட்டும் தேச பக்தி வரக்கூடாது - காயத்ரி ரகுராம் டுவீட்
ரபேல் வாட்ச் அணிந்து மட்டும் தேச பக்தி வரக்கூடாது என்று காயத்ரி ரகுராம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான புத்தகத்தை மத்திய மந்திரி கிரண்ரிஜிஜூ தனது டுட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"போலியான புத்தகத்தை அமைச்சர் விளம்பரப்படுத்துவது அபத்தமானது. தேச பக்தி ஐபிஎஸ் வேலையை ஒருவர் எப்படி ராஜினாமா செய்யலாம்? இந்த சுயநல அண்ணாமலையால் ஒரு ஏழை மாணவனின் ஐபிஎஸ் ஆக வாய்ப்பு நழுவிவிட்டது. வெறும் 9 வருடங்கள் தேச பக்தி வேலையை மட்டும் செய்துவிட்டு ராஜினாமா செய்த அண்ணாமலை அரசு பணத்தை வீணடித்தது.
ஐபிஎஸ் பயிற்சி பெறும் பலருக்கு இது எப்படி உத்வேகமாக இருக்கும்? அப்போது பலர் ராஜினாமா செய்யத் தொடங்குவார்கள் இல்லையா? ரஃபேல் வாட்ச் அணிந்து மட்டும் தேச பக்தி வரக்கூடாது, அரசு வேலைகளில் தேச சேவையில் இருக்க வேண்டும். பாதி வழியில் ராஜினாமா செய்வது சுயநலத்தை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
போலியான புத்தகத்தை அமைச்சர் விளம்பரப்படுத்துவது அபத்தமானது. தேச பக்தி ஐபிஎஸ் வேலையை ஒருவர் எப்படி ராஜினாமா செய்யலாம்? இந்த சுயநல அண்ணாமலையால் ஒரு ஏழை மாணவனின் ஐபிஎஸ் ஆக வாய்ப்பு நழுவிவிட்டது. வெறும் 9 வருடங்கள் தேச பக்தி வேலையை மட்டும் செய்துவிட்டு ராஜினாமா செய்த அண்ணாமலை அரசு… https://t.co/eEY6sg54Jw pic.twitter.com/wu6n8FsCa9
— Gayathri Raguramm (@Gayatri_Raguram) March 15, 2023