மணலூரில் ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை பணிகள்

மணலூரில் ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை பணிகளை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-15 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது மணலூர் ஊராட்சி. இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் நிழற்குடை இல்லாமல் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தனது மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் அரசிமுருகன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், சேகர், கோபால், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கண்ணன், ஊராட்சி எழுத்தர் சிந்திஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்