சிவப்பு பட்டை அணிந்து கலந்து கொண்ட ஆசிரியர்கள்

ஊக்க ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி நாகையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்கள் சிவப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Update: 2022-08-27 17:14 GMT

வெளிப்பாளையம்:

ஊக்க ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி நாகையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்கள் சிவப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

சிவப்பு பட்டை அணிந்த ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் 131 மையங்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட 1,500 ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சிவப்பு பட்டை அணிந்திருந்தனர்.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு காலத்துக்கு ஏற்றவாறு கல்வி கற்பிக்க, தங்களது கல்வி தகுதியை அவ்வப்போது உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு, உயர்கல்வி படித்து தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

ஊக்க ஊதிய உயர்வு

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு, உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது நிறுத்தப்பட்டது. எனவே உயர்க்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் சிவப்பு பட்டை அணிந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்