மக்களவை தேர்தல்: சென்னையில் 8-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது.;

Update: 2024-01-04 09:26 GMT

சென்னை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2019-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று அமைந்த மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால், 2024 ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. 8ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வர உள்ளனர்.

மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் பாதுகாப்புகள் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்