தர்மபுரி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கட்சியினர் பாடுபடுவோம்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கட்சியினர் பாடுபடுவோம் என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேசினார்.
மொரப்பூர்:
பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோளையானூர், வெங்கடசமுத்திரம், பட்டுகோணம்பட்டி, மஞ்சவாடி, அதிகாரப்பட்டி, அ. பள்ளிப்பட்டி, எச்.புதுப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய ஊராட்சிகளிலும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகளிலும் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கி கிளை செயலாளர்கள், பேரூராட்சி வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.மனோகரன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், பேரூர் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், கவுதமன், பேரூராட்சி தலைவர் மாரி, ஒன்றியக்குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், பேரூராட்சி துணைத்தலைவர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.