பர்கூர் தாமரைகரையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பர்கூர் தாமரைகரையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.;
அந்தியூர்
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி தாமரைகரையில் தமிழக அரசு வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பர்கூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி நேற்று பர்கூர் தாமரைகரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.