வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தமோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது

கூடலூரில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-17 18:45 GMT

கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ஜெயராஜ். நேற்று முன்தினம் இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் கூடலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜெயராஜ் வீட்டு முன்பு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர்கள் லோயர்கேம்ப் கடைவீதி தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 21), குமார் (21), பாண்டியன் (30) என்பதும், அவர்கள் கேரளாவிற்கு தப்பி ஓட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து லோயர்கேம்ப் தனிப்பிரிவு போலீஸ்காரர் செல்லமணி, தலைமை காவலர் சதீஷ்குமார் ஆகியோர் குமுளி மலைப்பாதையில் அவர்களை மடக்கி பிடித்தனர். இதில் மணிகண்டன், குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பாண்டியன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்