ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 9-வது நாளாக தடைவிதிப்பு
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒகேனக்கல்,
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 9-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.