பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல் காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.;
திண்டுக்கல் ராமசாமிபுரம் காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோமதி வரவேற்றார். பள்ளி நிர்வாகி பத்மநாபன், பள்ளிக்குழு தலைவர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் பாலாஜி சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெற்றோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.