பரந்தூர் விமான நிலைய திட்டம்: கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கிராம மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும் ஏகனாபுரம் கிராம மக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

Update: 2023-10-03 12:34 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதால் வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் அக்கம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும் விளைநிலங்களும் பறிபோய்விடும் என கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா முன்னிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் சுந்தரமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொண்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கிராம மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும் ஏகனாபுரம் கிராம மக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்