பரமத்தியில் பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் விரட்டியடிப்பு

பரமத்தியில் பொதுமக்களை அச்சுறுத்திய மலை தேனீக்கள் விரட்டியடிப்பு

Update: 2022-11-10 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாலையோரத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் ஏராளமான மலை தேனீக்கள் கூடுகட்டி இருப்பதாகவும், அவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கொட்டி அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பரமத்திக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள் சென்றனர். பின்னர் அவர்கள் புளியமரத்தில் கூடுகட்டி இருந்த மலை தேனீக்களை தண்ணீரை பீச்சியடித்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்