பரமன்குறிச்சி மாநாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா

பரமன்குறிச்சி மாநாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில கொடைவிழா நடந்தது.

Update: 2023-04-26 18:45 GMT

உடன்குடி:

பரமன்குறிச்சி அருகேயுள்ள மானாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை 5மணிககு திருச்செந்துரிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து மானாடு விஸ்வகுலஅக்கசாலை விநாயகர் கோவிலில் தீபாராதனை நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்ப கலசம் ஏற்றி தீபாராதனை நடந்தது. 21-ந்தேதி அதிகாலை 5மணியளவில் சுவாமி ஊர்சுற்றி வருதல், மதியம் 12மணி சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6மணி பக்தர்கள் பொங்கலிடுதல், இரவு 12மணிக்கு கணியான் ஆட்டம், வில்லிசை, அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதிகாலை 2மணியளவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு படைப்பு, தீபாரதனைக்குப்பின் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்