பாப்பாக்குடி மூன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பாப்பாக்குடி மூன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-01-28 21:33 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 3 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், பல்வேறுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் விமானத்துக்கும், மூன்றீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. மதியம் மகேஸ்வர பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அறநிலையத்துறை செயல் அலுவலர் ரேவதி, தக்கார் கோமதி, ஆய்வாளர் சந்தானலட்சுமி, பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் துணைத்தலைவருமான மாரிவண்ணமுத்து, பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆணைக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் அய்யாதுரை தலைமையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்