பனிமயமாதா தங்கத்தேர் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு
தூத்துக்குடியில் பனிமயமாதா தங்கத்தேர் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டது.;
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 16-வது தங்கத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தங்கத்தேர் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் தூத்துக்குடி அழகர் ஜூவல்லர்ஸ் சார்பில் பனிமயமாதா திருவுருவமும், தங்கத்தேர் உருவமும் பொறிக்கப்பட்ட பிரத்யேக தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தூய பனிமய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் பங்குத்தந்தை குமார்ராஜா ஜெபித்து ஆசீர்வதித்து வெளியிட்டார். இதன் முதல் நாணயத்தை அழகர் ஜூவல்லர்ஸ் குடும்பத்தினர் தூய பனிமய மாதா பேராலயத்துக்கு காணிக்கையாக வழங்கினர்.