திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: ஓடும் காரில் திடீர் தீ; அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்

திருப்பரங்குன்றத்தில் ஓடும் காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

Update: 2023-04-16 20:59 GMT

     திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றத்தில் ஓடும் காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

ஓடும் காரில் திடீர் தீ

மதுரை சிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் யோகானந்தம். டிரைவர். இவர் நேற்று காலையில் ஒரு ஆம்னி காரில் திருப்பரங்குன்றத்திற்கு வந்து ஒரு கடையில் சிமெண்ட் தள கற்களை வாங்கினார். பின்னர் அங்கு இருந்து வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

பசுமலை மூலக்கரை அருகே வந்த போது திடீரென்று காரில் இருந்து கரும்பு புகை வெளியேறியது. உடனே அவர் சுதாரித்து கொண்டு ரோட்டின் ஓரமாக காரை நிறுத்தினார். மேலும் அவர் காரை விட்டு அவசரம், அவசரமாக கீழே இறங்கினார்.

கார் எரிந்து சேதம்

இந்த நிலையில் கார் தீப்பிடித்து மள,மளவென எரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ரோட்டில் இருபுறமும் வந்த வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தகவலறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அதிகாரி உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 40 நிமிடத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார் சேதமடைந்தது..

இது குறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் அவர்கள் விசாரணை நடத்தினர். அதில் கியாஸ் கசிந்ததால் தீப்பிடித்ததாக தெரிய வந்தது. மேலும் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்