ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாண்டியராஜன், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), செயலாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், ஊழியர்களை இடமாற்றம் செய்வேன் என்று மிரட்டுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிளை தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் கோபிராஜ், பொருளாளர் கண்ணன், முன்னாள் தலைவர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் துளசிதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்யாவிட்டால், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.