பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவு

விருதுநகர் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானது.

Update: 2022-07-12 21:33 GMT

விருதுநகர் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானது.

வாக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டத்தில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 11 பதவி இடங்களுக்கு கடந்த 9-ந் தேதி 28 மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் விருதுநகர் பஞ்சாயத்துயூனியன் அலுவலகத்தில் அழகாபுரி மற்றும் வலையப்பட்டி ஆகிய 2 கிராம பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதன் விவரம் வருமாறு;-

அழகாபுரி பஞ்சாயத்தில் பதிவான வாக்குகள் 713. செல்லாதவை 29, அழகுத்தாய் 557, முனீஸ்வரி 127.

430 வாக்கு வித்தியாசத்தில் அழகுத்தாய் வெற்றி பெற்றார்.

வலையப்பட்டி பஞ்சாயத்தில் பதிவான வாக்குகள் 729. செல்லாதவை 9. இதில் மீனாட்சி 410, முத்துப்பாண்டி 310 வாக்குகள் பெற்றனர். இதில் 100 வாக்குகள் வித்தியாசத்தில் மீனாட்சி வெற்றி பெற்றார்.

கல்லூரணி

திருச்சுழி யூனியன் கல்லூரணி கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவு விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் 2,413. பதிவானது 1,847. செல்லாதவை 23. ராஜமாணிக்கம் 900 வாக்குகளும், சிவ நாராயணன் 681 வாக்குகளும், பாலசுப்பிரமணியன் 209 வாக்குகளும், முனியசாமி 29 வாக்குகளும், ஜெய்சங்கர் 5 வாக்குகளும் பெற்றனர்.

இதில் ராஜமாணிக்கம் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ராஜமாணிக்கத்திற்கு அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார் முன்னிலையில் தேர்தல் அதிகாரி காமேஸ்வரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்