ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் பணியாளர்கள் முற்றுகை போராட்டம் செய்தனர். இந்தத் திட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் முரண்பாடு உள்ளதாக கூறி அதை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் செய்தனர். இது குறித்து அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மீனாள், துணைத் தலைவர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (வேலை உறுதி திட்டம்) சக்திவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, ஊராட்சி செயலர் செல்வம் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.