பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
கடையம் யூனியன் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
கடையம்:
கடையம் யூனியன் 23 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம், திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 23 பஞ்சாயத்து தலைவர்களும் ஒருங்கிணைந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற வேலைகளை ஊராட்சி மன்ற தலைவர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். வேலையில் பிறர் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர்கள் செண்பகவல்லி ஜெகநாதன், அழகுதுரை, முத்துலட்சுமி ராமதுரை, கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.