பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

வள்ளியூரில் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

Update: 2023-08-08 20:01 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் யூனியனை சேர்ந்த 18 பஞ்சாயத்து தலைவர்களுக்கான சாதாரண கூட்டம் வள்ளியூரில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அசன்மைதீன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவரும், தெற்கு கருங்குளம் பஞ்சாயத்து தலைவருமான ருக்கு சத்யா, செயலாளர் தனக்கர்குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கதுரை, துணை செயலாளர் தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்து தலைவர் முத்தரசி, பொருளாளர் வேப்பிலான்குளம் பஞ்சாயத்து தலைவர் முருகன், ஆலோசகர் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 188 (3)-ன் படி ஊராட்சிகளின் நிதி வரவு மற்றும் வரி வசூலை பொறுத்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மேக்கர் என்ற பெயரில் ஊராட்சி செயலருக்கு மூன்றாவதாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது ஊராட்சி சட்டத்தை மீறும் செயலும், தலைவர்கள் மற்றும் துணை தலைவர் ஆகியோர் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். ஆகவே ஊராட்சி செயலருக்கு வழங்கிய மேக்கர் என்ற அதிகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் 18 பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்