பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர்

பண்ருட்டி அருகே பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் அதை வீடியோவாக படம் எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2023-06-28 19:06 GMT

புகார் மனு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நேற்று கடலூர் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், அவர் கூறியிருப்பதாவது:-

உல்லாசம்

எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஊராட்சி மன்ற தலைவர், தங்கள் பகுதியில் இருந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலைக்கு வரும் பெண்கள் சிலரிடம் வாழ்வாதார திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவதாகவும், பிற சலுகைகள் பெற்று தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி, உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து அவர்களை நிர்வாணமாக்கி ஆபாசமாக படமும் எடுத்து வைத்துள்ளார். அந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பல அப்பாவி குடும்ப பெண்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக கிராமத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை

மனுவை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், இது பற்றி சைபர் கிரைம் போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பிறகே, அவர் எத்தனை பெண்களை சீரழித்து உள்ளார். அவரது வலையில் வீழ்ந்த பெண்கள் எத்தனை பேர் போன்ற பல்வேறு விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்