பஞ்சநதிகுளம் கிழக்கு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

பஞ்சநதிகுளம் கிழக்கு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

Update: 2022-05-29 17:02 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிகுளம் கிழக்கு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வீதி உலாவும் நடக்கிறது. நேற்று இரவு சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நாளை(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் விளையாட்டு விழா நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்