பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பால்குட திருவிழா

சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பால்குட திருவிழா நடந்தது.

Update: 2023-10-25 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நேற்று முன்தினம் விஜயதசமியை முன்னிட்டு 504 பால்குட அபிஷேக வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காவிரி கரையில் கூடிய பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு பால் குடங்கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.பின்னர் நீண்ட வரிசையில் நின்று, பாபாவிற்கு தங்கள் கைகளிலேயே அபிஷேகம் செய்தனர்.விழா குறித்து பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஜீயர் ஸ்ரீமத் வாயு சித்த ராமானுஜ தாச ஜீயர் கூறுகையில், ஆண்டுதோறும் விஜயதசமி அன்று பாபாவின் நினைவு நாளையொட்டி இந்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறும் என்றும் பக்தர்கள் அவர்கள் கைகளாலேயே பாபாவிற்கு அபிஷேகம் செய்து வணங்கலாம் என்றும் தெரிவித்தார். இதில் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் குத்தாலம் போலீசார் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்