பஞ்சாலை தொழிலாளர்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஞ்சாலை தொழிலாளர்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-06-07 01:37 IST

திருச்சி தாலுகா சி.ஐ.டி.யு. பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது, ராம்ஜிநகர் பஞ்சாலையில் பணியாற்றிய 820 தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.15 கோடியை தொழிலாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியில் சி.வி.ராமன் ஸ்டெம் பூங்காவின் முன்பகுதியில் நுண்ணுர செயலாக்க மையம் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பையால் பூங்காவுக்கு வரும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் நுண்ணுர செயலாக்க மையத்தை அப்புறப்படுத்த வேண்டும். பூங்காவின் நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச்செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்