தமிழக-கர்நாடக எல்லையில் நீர்த்தேக்கமாக மாறிய பாலாறு

தமிழக- கர்நாடக எல்லையில் பாலாறு நீர்த்தேக்கமாக மாறி காட்சி அளிக்கிறது.

Update: 2022-07-19 19:36 GMT

கொளத்தூர்

தமிழக-கர்நாடக எல்லையில் காவிரியின் துணை நதியான பாலாறு அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் போது, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் அடிப்பாலாறு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலந்து வருவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்்கெடுத்து வருகிறது.

அதே நேரத்தில் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்தோடி மேட்டூர் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

வழக்கமாக பாலாற்றில் மழைநீர் வரும்போது செந்நீர் காடாக வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடும். ஆனால் தற்போது கர்நாடகத்தில் இருந்து காவிரி ஆற்றில் வரும் உபரிநீரும், பாலாற்றின் தண்ணீரும் அடி பாலாற்றில் கலந்து நீர்த்தேக்கம் போன்று தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்த தண்ணீரானது, மேட்டூர்-மைசூர் சாலையில் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வரை தேங்கி ஒரு நீர்த்தேக்கம் போன்று பாலாறு மாறி உள்ளது. மழைக்காலங்களில் செந்நீர் பெருக்கெடுத்து ஓடும் பாலாறு, தற்போது எந்த வித சலனமும் இன்றி நீர்த்தேக்கமாக மாறி உள்ளது இயற்கையின் கொடை என்று அந்த வழியாக செல்வோர் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்