பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு...!

பழனி முருகன் கோவிலில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள முன்பதிவு இன்று தொடங்கியது.

Update: 2023-01-18 11:05 GMT

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும்பக்தர்கள்

இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in என்று இணையதளத்திற்கு சென்று ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதாவது ஒரு அவண எண்ணை சமர்ப்பித்து, அதோடு தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.

ஜன. 18-ம் தேதி முதல் ஜன.20-ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 2,000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவார்கள்.

ஜன. 18-ம் தேதி முதல் ஜன.20-ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 2,000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவார்கள்.

முன்பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 22-ம் தேதி இ-மெயில் எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு உறுதி செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி மலைக்கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை வேள்விச்சாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழனிக் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்