தூத்துக்குடியில் பெயிண்டருக்கு அடி-உதை

தூத்துக்குடியில் பெயிண்டருக்கு அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-11 18:45 GMT

தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). பெயின்டர். அதே பகுதியை சேர்ந்த உதயா என்ற உதயமூர்த்தி (23), சக்திவேல் (20) ஆகிய 2 பேரும் அடிக்கடி மது குடித்து விட்டு மது பாட்டில்களை கண்ணன் வீட்டில் வீசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ணன் பலமுறை கண்டித்து வந்தாராம். நேற்று முன்தினம் இரவும் மது குடித்து விட்டு பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணன் சத்தம் போட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைநத உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரும் சேர்ந்து கண்ணனை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த கண்ணன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயமூர்த்தி, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட உதயா என்ற உதயமூர்த்தி மீது 8 வழக்குகளும், சக்திவேல் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்