மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-02 11:13 GMT

திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மது பழக்கம் கொண்ட மோகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி குடும்ப தகராறு ஏற்பட்டு மனைவி கோபித்துக் கொண்டு மகனுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். தனிமையில் இருந்த மோகன் தன் மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் மது போதையில் 2 முறை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு காப்பாற்றி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதியன்று மீண்டும் மோகன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்