மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது

மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது

Update: 2022-12-25 18:45 GMT

கோவை

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நல்லமுத்து(வயது 45). பெயிண்டர். இவருைடய மனைவி சுதாபிரியா(35). இந்த நிலையில் நல்லமுத்து தனது மனைவி சுதாபிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நல்லமுத்து தனது மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் சுதாபிரியா தனது கணவரை விட்டு பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் அவர், செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, மனைவியை தாக்கிய பெயிண்டர் நல்லமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்