கேரள சுற்றுலா பயணிகள் வருகையால் 'களை' கட்டிய பத்மநாபபுரம் அரண்மனை
கேரள சுற்றுலா பயணிகள் வருகையால் ‘களை’ கட்டிய பத்மநாபபுரம் அரண்மனை
தக்கலை:
கேரள சுற்றுலா பயணிகள் வருகையால் 'களை' கட்டிய பத்மநாபபுரம் அரண்மனை
கேரள மாநிலத்தில் நேற்று விஷூ பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளித்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் சுற்றுலாவிற்காக குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் பத்மநாபபுரம் அரண்மனையின் அழகையும், பிரமாண்டத்தையும் காண்பதற்காக அதிகமானோர் வந்ததால் நேற்று அரண்மனை களை கட்டியது, கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் வரிசையில் நின்று செல்லவேண்டிய நிலை இருந்தது. கேரள பயணிகள் வருகையால் அப்பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் அதிகமாக நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.