பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புபிடி வீரர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Update: 2023-03-24 10:46 GMT

சென்னை,

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில் பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்