குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் நெல்லுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் நெல்லுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை;

Update:2022-08-28 01:32 IST

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் நெல்லுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

மரக்கன்று நடும் விழா

தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் இந்த திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நேற்று தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் கவின்மிகு தஞ்சை இயக்கம், நாஞ்சிக்கோட்டை சிட்கோ சிறுகுறு தொழில் நல சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல் சேதம் அடையவில்லை

தஞ்சை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை பாதுகாக்க புதிய தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திறந்தவெளி கிடங்கிற்கும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாஞ்சிக்கோட்டையில் உள்ள அரசு நெல் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக நான் நேரில் சென்று பார்வையிட்டேன். நெல்கள் எந்தவித சேதமும் அடையவில்லை. ஆனால் சாக்குகள், தார்ப்பாய்கள் சேதம் ஆகின.

அதிகாரிகள் ஆய்வு

நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க வைக்கப்பட்ட கெமிக்கல் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் தஞ்சை கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் அறச்செல்வி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்