கனமழை காரணமாக நெற்பயிர்கள் நாசம்

மேல்பாடியில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் நாசமானது.

Update: 2023-09-25 17:38 GMT

காட்பாடியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பள்ளமான இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கியது.

கனமழை காரணமாக மேல்பாடி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நாசமானது. இதையடுத்து நேற்று காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் அங்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது மேல்பாடி வருவாய் ஆய்வாளர் சுஜாதா, கிராம நிர்வாக அலுவலர் யோகேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்