பழனி பாதயாத்திரை காவடி பூஜை

குமாரபாளையம் அருகே பழனி பாதயாத்திரை காவடி பூஜை நடைபெற்றது.

Update: 2023-02-11 18:45 GMT

குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே பழனி பாதயாத்திரை காவடி பூஜை நடைபெற்றது. எடப்பாடி பகுதியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்த பாதயாத்திரையில் பழனிக்கு சென்று, ஒரு நாள் இரவு முழுவதும் பழனி மலை மீது தங்கியிருந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். அங்கேயே பஞ்சாமிர்தம் தயாரித்து சாமிக்கு அபிஷேகம் செய்து வருவார்கள். இந்த ஆண்டிற்கான பாதயாத்திரை நேற்று தொடங்கி எடப்பாடியில் இருந்து தேவூர், குமாரபாளையம் அருகே உள்ள ஆயிக்கவுண்டம்பாளையம், பல்லக்காபாளையம், ரங்கனூர் வழியாக சென்றனர். இவர்களுக்கு ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதி முருக பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கபட்டது. இவ்வழியே வந்த காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேளதாளத்திற்கு ஏற்றவாறு பக்தர்கள் காவடியாட்டம் ஆடியது பக்தர்களை பரவசமடைய செய்தது. காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்