பொன்மலையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை
பொன்மலையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றனர்.
பொன்மலைப்பட்டி, செப்.4 -
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர். முன்னதாக சிறப்பு திருப்பலியை பங்கு தந்தை ஆரோக்கியராஜ் நடத்தினார். பின்னர் பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துக்கொண்டு சென்றனர். தேரில் உள்ள மாதா சிலையை பங்கு தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து மந்திரித்தார். சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.