உடன்குடியில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா

பாதயாத்திரை நிறைவு விழா;

Update:2022-08-16 22:50 IST

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சுதந்திர தின பவள விழா பாதயாத்திரையின் நிறைவு விழா, உடன்குடியில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசினார்.

உடன்குடி மெயின் பஜாரில் தொடங்கிய யாத்திரைக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின்பிரசாத், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நடராஜன், திருச்செந்தூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனிஷ், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், காங்கிரஸ் அகில இந்திய செயலர் வைசாக், மாநில பொதுச்செயலர் அஸ்வத்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்